- Get link
- X
- Other Apps
PGTRB 2023-24 அடுத்து எப்போது நடைபெறும்? பாடத்திட்ட மாற்றம் ?எவ்வாறு பயிற்சி எடுப்பது? முழுமையான தகவல்
Posted by
Subhi legendry education
on
- Get link
- X
- Other Apps
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 2023 - 24 இந்த ஆண்டிற்கான தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு தேர்வர்களுக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய சந்தேகம் என்பது
*இதற்கான பாடத்திட்டம் என்ன ?
*காலிப் பணியிடங்களில் எண்ணிக்கை எவ்வளவு?
*எப்பொழுது இந்த தேர்வு நடைபெறும் ?
* இதற்கான அறிவிப்பு எப்பொழுது வெளிவரும்?
என்பதனைக் குறித்த தகவல்கள் நாள்தோறும் சமூக வலைதளங்களில் ஒவ்வொரு தேர்வர்களும் தேடிக்கொண்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையில் நமது சுபி குழுவில் சார்பாக இதற்கான முழுமையான தகவல்கள் திரட்டப்பட்டு பகிரப்படுகிறது தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு தேர்வர்களும் இந்தப் பதிவினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 2023-24 பாடத்திட்டத்தை குறித்து முழுமையான தகவல்
இந்த போட்டித் தேர்விற்கு பாடத்திட்ட மாற்றம் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன இதற்கான முழுமையான தகவல் என்பது அரசுதலில் வெளியிடப்பட்டு தேர்வர்களுக்கு வழங்கப்படும் இதற்கான காலம் என்பது சற்று அதிகமாகும் ஆகவே தேர்வர்களும்புரிந்து கொள்ள வேண்டிய தகவல் என்பது பாடத்திட்ட மாற்றம் என்பது நூறு சதவீதம் உறுதி மாற்றப்பட்ட பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு சிறிது காலத்திற்கு பிறகு தான் வழங்கப்படும் என்பது உறுதி தற்போதைய தகவல் இந்த சூழ்நிலையில்
பாடத்திட்டத்தில் மாற்றம் என்பது எவ்வாறு இருக்கும்
பாடத்திட்டத்தில் மாற்றம் என்று அரசு துறை வட்டாரங்களில் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்கள் இவர்களிடையே கலந்த ஆலோசித்து பெறப்பட்ட தகவல் என்பது கல்வி உளவியல் பகுதியை பொருத்தவரையில் பாடத்திட்ட மாற்றம் என்பது ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த பாடத்திட்டத்தில் உள்ள கருத்துக்களை அப்படியே எடுத்துக் கொண்டு அந்தக் கருத்துக்கள் தொடர்பானபுதிய தகவல்களை இணைத்து வழங்கப்படும்
பொது அறிவினை பொருத்தவரையில் பாடத்திட்டத்தில் எந்த ஒரு மாற்றமும் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை நடப்பு நிகழ்வுகள் பகுதியை பொருத்தவரையில் மிக முக்கியத்துவம் வழங்கப்படும் விளையாட்டு, பொருளாதாரம், புதிய நியமனங்கள் ,மாநாடுகள், சிறப்புகள், மாநில முதன்மைகள் போன்ற பகுதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் மற்றபடி பொதுஅறிவினை பொருத்தவரையில் தற்பொழுது நடைபெற்று இருக்கக்கூடிய தகவல்களை இணைத்து கேட்பதற்கான வாய்ப்பாக இவை அமையும் தவிர பாடத்திட்டத்தினை முழுமையாக மாற்றுவது என்பது வாய்ப்பற்ற செயல்.
download subhi legendry education mobile app
முதன்மை பாடத்தை அதாவது தங்களது subject பொருத்தவரையில் புதிய நிகழ்வுகளை அந்தந்த துறையில் புதியதாக நடைபெற்ற ,உருவாக்கப்பட்ட அல்லது கண்டுபிடிக்கப்பட்ட இதே போன்று 11 மற்றும் 12ம் வகுப்பில் உள்ள பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய தகவல்கள் இணைக்கப்படும் இதைத் தவிர்த்து பெரிய அளவில் மாற்றம் என்பது இருப்பதற்கான வாய்ப்புகள் என்பது கிடையாது கிட்டத்தட்ட 70% பாடத்திட்டம் பழைய பாடத்திட்டத்தை பின்பற்றி இருக்கும் 30 சதவீத பாடத்திட்டம் என்பது புதியதாக நிகழ்ந்த நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து கேட்கப்படும் குறிப்பாக ஆசிரியர் நியமன தேர்விற்கு கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தினை இணைப்பதற்கான வாய்ப்புகள் அதிகபட்சம் உள்ளது
தமிழ் பாடத்தை பொறுத்தவரையில் புதுக்கவிதை, இதழியல், நாட்டுப்புற கவிதைகள் ,கல்வெட்டியல் ,தமிழர்களின் பண்டைய கால பண்பாடுகள் போன்ற தகவல்கள் இணைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது இதை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை ஆகவே இந்தத் தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு தேர்வுகளும் தற்பொழுது இருந்து தங்களது பயிற்சி இனி மேற்கொள்கின்ற பட்சத்தில் 70 சதவீத பாடத்திட்டத்தை தாங்கள் நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகபட்சம் உள்ளது என்பது எங்களது தாழ்மையான கருத்துக்கள்
காலி பணியிடங்களின் எண்ணிக்கை
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தற்போது உள்ள சூழ்நிலையில் 254 காலி பணியிடங்கள் ஆனது உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் குறிப்பாக தமிழ் ,வரலாறு, பொருளாதார ,வணிகவியல், வேதியியல், போன்ற பாடப் பிரிவிற்கு ஐம்பதற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் ஆனது உருவாக்கப்பட்டுள்ளது இந்த பணியிடம் தற்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையை பொருத்த வரை. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக தங்களது பணி நிறைவை மீண்டும் புதுப்பித்து கொண்டு இருக்கக்கூடிய பணியாளர்களுடைய ஓய்வு என்பது இந்த ஆண்டு நடைபெறக்கூடியது உறுதி
இதே போல் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் புதியதாக தரம் உயர்த்தப்படுகின்ற பள்ளிகளின் எண்ணிக்கையானது வெளியிட வாய்ப்புகள் அதிகபட்சம் உள்ளது ஒவ்வொரு ஆண்டும் இந்த காலகட்டத்தில் தான் வெளியிடப்படுகிறது அதே போல் ஓய்வு பெறக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது அனைவரும் அறிந்த உண்மை அதுபோக மாணவர்களின் எண்ணிக்கை இவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கின்ற பட்சத்தில் தற்போது நிரப்ப கொண்டிருக்க கூடிய பணியிடம் என்பது 2019- 20 ஆண்டுக்குரியது மட்டுமே. இதுபோக 2021 -22 23 இந்த ஆண்டுகளின் உடைய காலி பணியிடம் என்று கணக்கெடுக்கின்ற பட்சத்தில் மதிப்பிடத்தக்க காலி பணியிடங்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் உருவாகும் என்பது மறுக்க முடியாத உண்மை. அறிவிப்பு என்பது நிச்சயமாக 2023 அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வெளியிடப்பட்டு தேர்வுகள் 2024 நடத்துவதற்கான சூழ்நிலைகள் காணப்படுகிறது
ஒவ்வொரு பாடத்திற்குமே நல்லதொரு காலிப் பணியிடங்கள் இருக்கும் என்பதும் தற்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலை ஆகவே இந்தத் தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு தேர்வர்களும் 2023 இறுதி பகுதியில் தேர்வு என்பது உறுதி என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு தற்பொழுது இருந்து உங்களுடைய பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்கின்ற பட்சத்தில் வரக்கூடிய காலங்களில் நீங்களும் மாறலாம் முதுகலை பட்டதாரி ஆசிரியராக இதில் எந்த அளவு மாற்றம் என்பது கிடையாது உங்களுடைய பயிற்சியை சிறந்த முறையில் திட்டமிட்டு பயணத்தை மேற்கொள்ளுங்கள் முழு நம்பிக்கையோடு வருங்கால ஆசிரியர்கள் ஆகுவோம் என்று .
தேர்வர்கள் அடுத்து மேற்கொள்ள வேண்டிய செயல்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 2022 பிப்ரவரியில் நிறைவுற்றதை தொடர்ந்து மார்ச் மாதத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று மற்றும் இரண்டு இந்த தேர்விற்கு நிறைய தேர்வர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இருக்கின்றனர் ஆசிரியர் தகுதி தேர்வை பொருத்தவரையில் உங்களுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டு குறிப்பாக கல்வி உளவியல் பாடப்பகுதி முழுவதும் மாற்றப்படாமல் 30 சதவீதப் பகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது இந்த பாடத்திட்டத்தினை முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கும் எதிர்கொள்ளலாம் என்கின்ற பட்சத்தில் இந்த கல்வி உளவியல் பகுதியை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
மேலும் ஆசிரியர் தகுதி தேர்விற்கு தங்களது பாடத்திற்கு பயிற்சி எடுக்கக்கூடிய 6 முதல் 12 வகுப்பு புதிய சமச்சீர் பாடடை புத்தகத்தை இணைத்து இளங்கலை முதுகலை பாடப் புத்தகத்தையும் தயார் செய்து பயிற்சி மேற்கொள்வது என்பது கிட்டத்தட்ட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதோடு ஆசிரியர் தகுதி தேர்விற்கு தாங்கள் 30 சதவீதத்திற்கு மேல் பயிற்சியை முடித்துக் கொள்வதால் மீதி 40 சதவீதம் மீதி இருக்கக்கூடிய காலத்திற்கு நீங்கள் எடுத்தால் போதும் மீதி 30 சதவீதம் புதிய பாடத்திட்டம் அமைந்த பிறகு பயிற்சியை மேற்கொள்வது சாலச் சிறந்தது ஆகவே ஒவ்வொரு தேர்தலும் இந்த வழிகாட்டுதலை தற்பொழுது பயன்படுத்திக் கொள்ளுங்கள்
சுபிக் குழுவின் பங்களிப்பு
இந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு சுபிக் குழுவின் சார்பாக ஓர் ஆண்டிற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு தமிழ் மற்றும் வரலாறு பாடப்பகுதிக்கு பயிற்சி வகுப்புகள் மாதிரி தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றது அதேபோல் மற்ற பாடப்பிரிவிற்கு வினா வங்கிகள் கையேடுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் .தமிழ் பாடத்தை பொறுத்தவரையில் பாடத்திட்ட மாற்றம் என்பது ஒரு மேம்பட்ட பாடத்திட்டமாக அமையும் மேலும் தற்பொழுது இருக்கக்கூடிய பாடத்திட்டத்தோடு இணைத்து ஒரு சில பகுதிகள் இடம்பெறும் என்பது திண்ணமான உண்மை
ஆகவே முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு தமிழ் பாடப் பிரிவிற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய ஆசிரியர்களுக்காக இலக்கிய வரலாறு புத்தகம் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகவே தற்பொழுது இவற்றில் இருந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் வழங்கப்பட்டு பிறகு இயல்வாரியான தேர்வுகள் பயிற்சிகள் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது டிசம்பர் 1 முதல் இந்த பயிற்சியானது நம்மளுடைய இணையதளத்திலும் கட்டண பகுதியாக சுபிக் குழுவின் மொபைல் ஆப்ஸ் மூலமாகவும் வழங்கப்படுகிறது ஒவ்வொரு தேர்தர்களும் இந்த வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
other details follow my youtube channel
- Get link
- X
- Other Apps
TNPSC/TRB/SCERT/RRB/TNTET/EXAM CENTRE
Comments
Post a Comment
thanking you