- Get link
- X
- Other Apps
Posted by
Subhi legendry education
on
- Get link
- X
- Other Apps
நவம்பர் 21 அன்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் 11 மற்றும் 12 வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து ஆணையானது வழங்கப்பட்டுள்ளது
இவற்றில் 254 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் பணியிடங்கள் இனி வரக்கூடிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் காலிப் பணியிடங்களோடு இணைக்கப்படும் தற்பொழுது இந்தப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தற்காலிகமாக நியமித்துக் கொள்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது அதனைக் குறித்த முழுமையான தகவல்
தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணி அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 20223 கல்வி ஆண்டில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து தமிழ்நாடு பள்ளி கல்வி ஆணையரின் ஆணை வழங்கப்பட்டுள்ளது
அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 2021 22 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதில் ஆசிரியர்கள் இன்றி உபரியாக கண்டறியப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளி கல்வி ஆணையரின் பொது தொகுப்பிற்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டு செயல்முறைகள் வாயிலாக ஆனை வழங்கப்பட்டுள்ளது அவ்வாறு பள்ளி கல்வி ஆணையரின் பொதுத் தொகுப்பில் உள்ள 254 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களை 11 மற்றும் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கோரி சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் 254 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தேவை உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக அனுமதித்து ஆணை வழங்கப்படுகின்றது
தமிழ் 33 காலிப்பணியிடங்கள் ஆங்கிலம் 2 காலிப்பணியிடங்கள் கணிதம் 51 காலிப்பணியிடங்கள் இயற்பியல் 50 காலிபணியிடங்கள் வேதியியல் 58 காலிப்பணியிடங்கள் வரலாறு 18 காலிப்பணியிடங்கள் வணிகவியல் 4 காலி பணியிடங்கள் பொருளியல் 38 காலி பணியிடங்கள்
இவ்வாறு புதியதாக அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களை சார்ந்த பள்ளியின் அளவுகோல் பதிவேட்டில் பதிவுகள் மேற்கொண்டு பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது
- Get link
- X
- Other Apps
TNPSC/TRB/SCERT/RRB/TNTET/EXAM CENTRE
Comments
Post a Comment
thanking you